உன்னிலிருந்து தூரமாய்
என்னிலிருந்து தூரமாய்

கடலுக்கு அப்பால்
காற்றுக்கு அப்பால்
மலையை தாண்டி
எனக்கொரு தீவு வேண்டும்
கர்வத்தை தணித்து
மன ஓலத்தை தணித்து
என்னில் இருக்கும்
உன்னை தேடி...
உன்னை மட்டும் தேடி
உணர
எனக்கொரு தீவு வேண்டும்.
உன்னை உணர்ந்து
என் மனவெளி எங்கும்
உன் அன்பை உணர்ந்து
எனக்கான காதலை
நீ உணர்ந்து
நான் வாழ
எனக்கொரு தீவு வேண்டும்.
அது வரையிலும்
நீயும் நானும்
ஒரே கூரையில்
தீவாய் வாழ்வோம்.
No comments:
Post a Comment