30 December 2011

நினைவுகள் -2

அப்பாவும் அம்மாவும்





எனக்கு தெரிய ஒருவருக்கு பிடிக்காததை இன்னொருவர் செய்ததே இல்லை. ஆனால் வெளியில் பார்க்கும் பொழுது அப்படி தெரியாது.



வருடத்திற்கு ஒரு சுற்றுலா, மூன்று மாதத்திற்கு ஒரு முறை சினிமாவும், ஓட்டலும், அப்போதைய fashion ல் புடவை, நகைகள் என்று என் அம்மாவிற்கு எந்த குறையும் வைக்காதவர்.

அவருக்கு சக்கரையும் உப்பும் குறைக்க வேண்டும் என்ற பின்பு அதே பத்திய சாப்பாட்டை இன்று வரையில் எந்த வியாதியும் இல்லாமல் சாப்பிடும் அம்மா.

இதை என்ன என்று சொல்வது.



என் அப்பா இறப்பதற்கு ஒரு 15 நாட்கள் முன்பு ஏதோ பேசி கொண்டு இருந்த பொழுது சொன்னார். " உங்க அம்மா இல்லைனா, இந்த குடும்பத்தை இவ்வளவு தூரம் வளர்த்து இருக்க முடியாது. அது எதையும் அனுபவிக்கவே இல்லை. இந்த ஏப்ரல் மாசம் பரீட்சை முடிந்தவுடன் நான், உங்க அம்மா, பிள்ளைங்க மட்டும் எங்கயாவது போய்ட்டு வர போறம், அதுக்கும் ஒரு சந்தோசமா இருக்கும் இல்லை" என்றார்.

ஏப்ரல் வந்து போய் விட்டது............

குறிப்பு: என் நண்பன் சரவணனுக்கு நான் இப்படி எழுதியது பிடிக்கவில்லை என்ற காரணத்தால், அவனுக்கு ஆட்சேபம் என்று பட்ட பகுதிகளை நீக்கியபின் கட்டுரை.









No comments:

Post a Comment

Followers