சட்டமிட்ட
படத்திற்கு ஒரு மாலை
பாட்டன்
முப்பாட்டன்
பெயர் சொல்லி
பிண்டம் வைத்து
படையல் போட்டு
அப்பா
உங்கள் நினைவு நாள்
நிறைந்து விட்டது.
******
அவ்வளவு தானா அப்பா!!!!!
அழகாய் மடித்து
சட்டை பைக்குள்
வைக்கப்பட்ட
கைக்குட்டையை
போல்
மனதின்
உணர்வின்
ஆழத்தில் நீங்கள்.......
*************
நல்ல புத்தகம்,
நல்ல இசை,
காலை செய்தித்தாள்
என உங்கள் நினைவுகள்,
கைதேர்ந்த
ஒரு மந்திரவாதியின்
தொப்பியின்
உள்ளே இருந்து
வெளி வரும்
பூக்களை போல்
முயலை போல்
வந்து கொண்டே உள்ளது.
************
மறந்தால் தானே
நினைவு நாள்?
***************
எப்படி இருக்கிறீர்கள் அப்பா.
No comments:
Post a Comment