27 December 2011

முடிவின் ஆரம்பம்




முடிவின் ஆரம்பம்


கொட்டும் அருவியாய்
உன்
நினைவு துளிகள்
என் மனவெளியில்.

மனவெளியில் இருள்
சூழும் பொழுது
என் உணர்வு விட்டு
வேறு உலகம் புக
நீ
தெரிகிறாய்
ஒற்றை வெள்ளியாய்
வானத்தில்.

வானத்தில்
அலையும் மேகங்கள்
விளையாடும் விண்மீன்கள்
உன்னை
தேடி தவிக்கும்
நான்.

நான் தேடுவது
உன்னையா
என்
நம்பிக்கையையா?

நம்பிக்கையும்
நீயும்
ஒன்றாய்
தெரிய
பிரகாசமாய்
என் மனவெளி.

மனவெளி எங்கும்
மீண்டும்
உன்
நினைவுகள்
கொட்டும் அருவியாய்


No comments:

Post a Comment

Followers