தேர்தல் திருவிழா
கடந்த 40 ஆண்டுகால அரசியலை எடுத்து கொண்டால் தமிழ்நாட்டில் அரசியல் செய்தவர்கள் எல்லாம் ஒன்று கருணாநிதியை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ தான் அரசியல் செய்து வந்து உள்ளார்கள்.

ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் இனி அரசியல் களம் ஜெயலலிதாவா - விஜயகாந்தா என்று மாறும் என்றே அனைவரும் எதிர்பார்தார்கள். ஆனால் கருணாநிதியோ நாங்கள் தனித்து போட்டியிட போகின்றோம் என்று சொல்லி தமிழக அரசியல் போக்கினை மாற்றி விட்டார்.
இந்த தேர்தலில் அதனால் ஜெயலலிதாவும் தனித்து போட்டி என்று சொல்லாமல் சொல்லி விட்டார். சென்ற தேர்தலில் வைகோவிற்கு அவமானம் நடந்த பொழுது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சீட்டு வாங்கிய கம்யூனிஸ்ட், இந்த முறை அவமானப்பட்டு திரும்பியது. குடிக்க தண்ணீர் கூட தரவில்லை என்ற எக்ஸ்ட்ரா புலம்பல் வேறு. தேமுதிகவிருக்கு அழைப்பு கூட இல்லை. மீண்டும் கடவுளுடனும் மக்களுடனும் கூட்டணி வைக்க வேண்டியவரை கம்யூனிஸ்ட் காப்பாற்றி உள்ளது. அந்த முகாமிலோ "மேலாதிக்க மனப்பான்மையுடன்" நடந்து கொண்டதாக திமுக மீது வருத்தம் தெரிவிக்கிறார் திருமா. (ஆனால் இவர்கள் அனைவரும் மீண்டும் போயஸ் தோட்ட கதவையோ, கோபாலபுரத்து கதவையோ

இந்த தேர்தலில் தனித்து போட்டி என்று முடிவு எடுத்தது மூலமாக திமுக சாதித்து என்ன?
1. எந்தவொரு தொண்டர் அமைப்பும், கிராமங்களில் கிளை அமைப்பும் இல்லாத காங்கிரஸ் இதுவரையில் எல்லா கூட்டணியிலும் இரண்டாவது இடத்தை பெற்று வந்தார்கள். ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் அதனை மாற்றி அமைக்க கூடும். மேலும் அவர்களின் பேரம் பேசும் (Bargaining Capacity) திறனை குறைக்க கூடும். எல்லா கட்சியிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டு மோதுவார்கள், ஆனால் இங்கோ மிக பெரிய நகைசுவையாக மேயர் பதவியில் இருப்பவருக்கு சீட் கொடுத்தால் "நான் விருப்ப மனுவே கொடுக்கவில்லை எனக்கு சீட் வேண்டாம்" என்று சொல்லுகிறார்.
2. ஈழ தமிழர் குறித்தும், பேரறிவாளன் உட்பட மூவரின் மரணதண்டனை குறித்த தமிழ் அமைப்புகளின் தாக்குதலில் இருந்து காங்கிரசை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் திமுகவிற்கு இல்லை. (சீமான் அவர்களே எங்கே போய் விட்டீர்கள் ? காங்கிரசை கருவறுக்க வேண்டாமா?? )
3. சட்டசபை தேர்தலில் நடந்தது போல் சீட் பேரத்தின் வெப்பம் தாங்காமல் ராஜினாமா நாடகம் நடத்தவேண்டிய நிர்பந்தம் இல்லை.
4. தமிழகம் முழுவதும் தனியாக போட்டி இடுவதன் மூலமாக சுமார் 1. 5 லட்சம் கட்சிகாரார்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும். ஸ்டாலின், அழகிரி மற்றும் உள்ள எல்லா கோஷ்டிக்கும் சீட் கொடுத்து விடலாம். இன்றைய தேதியில் கட்சியால் தாங்கமுடியாத ஒரு விஷயம் உட்கட்சி கலகம். அது இதன் மூலமாக ஓரளவிற்கு தவிர்க்கப்படும்.
5. சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்த திமுகவே தனித்து போட்டி என்றால் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற நாம் ஏன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா முடிவெடுப்பார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும், பல களம் கண்ட கருணாநிதிக்கு தெரியாத என்ன?
மேலும் பிற கட்சிகளுக்கும் இந்த தனித்து போட்டி என்ற முடிவு பல நிர்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.
1. கொஞ்சம் மனகசப்புகள் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலுக்காக சகித்து கொண்டு காலத்தை ஓ


2. திமுக, அதிமுக தவிர தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கிராமங்களிலும் கிளை கழகங்கள் உள்ள, பதவி சுகத்தை அறியாத தொண்டர்கள் உள்ள கட்சி மதிமுக. எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் அவமதிக்கப்பட்டே வந்து உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் பலத்தை நிருபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம். அவர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியுமே அவர்களுக்கு பிளஸ் தான்.
3. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பாமக தனது உண்மையான பலத்தை அறிந்து கொள்ள அவர்களுக்கே ஒரு சந்தர்ப்பம்.
விடுதலை சிறுத்தைகள் உட்பட பல சிறிய கட்சிகளுக்கு ஒரு விண்ணப்பம்: ஒரு சீட்க்கும் இரண்டு சீட்டுக்கும் கொள்கைகளை விட்டு கூட்டணி வைக்காமல் தாங்கள் செல்வாக்காக இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு நன்றாக கள பணிகள் செய்து கட்சியை வளர்க்க உழைத்தாலே போதும். கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு நல்ல இடத்தினை பிடிக்கலாம்.
பார்ப்போம் இந்த திருவிழாவில் யார் எல்லாம் காணாமல் போக போகிறார்கள் என்று.
(இந்த கட்டுரையில் இடம் பெற்று உள்ள கார்டூன்களை வரைந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்)
No comments:
Post a Comment