நானும் அப்பாவும்
என் அப்பா இறந்தது 2011 ஜனவரி மாதம் 9 ம் தேதி. அவரது நினைவு நாள் 29 ம் தேதி வந்தது. நான் தினமும் ஒரு தலைப்பில் அப்பாவும் - அவருடன் சம்மந்தம் உள்ளவர்கள் என்ற தலைப்பில் அதாவது அப்பாவும் அம்மாவும், அப்பாவும் தம்பியும் என்று எழுதுவதாக இருந்தேன்.
ஆனால் ஜெயமோகன், சாரு நிவேதிதா எழுத்துகளுக்கு வரும் எதிர்ப்பு போல் வந்ததால், அதுவும் சொன்னவர் என்னை விட என் அப்பா மேல் ப்ரியம் கொண்டவர் என்பதால் எனக்கும் அவருக்குமான உலகத்தை பற்றி மட்டும் எழுதலாம் என்று எண்ணி உள்ளேன்.
************************************************************************************
என் அப்பாவை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் எனக்கு எப்பொழுதும் உடனே நினைவில் வருவது, எனக்கும் அவருக்குமான பேருந்து நிலைய சம்பவம்.
மரத்தின் வேர்கள் ஆழ பதிந்து மண்ணுக்குள் போய்விட்டாலும் அதன் இருப்பை பூத்து குலுங்கும் மலர்கள், கனிகள் மூலம் காட்டுவதை போல் என் மனதின் ஆழத்தில் புதைந்து விட்ட நினைவுகளில் ஒன்று.
நான் கல்லூரியில் சேர்ந்த வருடம். அப்பொழுது நாங்கள் புதியதாக வீடு ஒன்று கட்டிஇருந்தோம். ஒரு மத்தியதர வர்கத்திற்கு உண்டான பொருளாதார சிக்கல்கள். அதிலும் என் அம்மாவிற்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்று ஒரு கொள்கை. அந்த வருமானம் வேறு இல்லாத நிலைமை. அதன் காரணமாக மொத்த வீட்டிலும் நாங்களே குடி இருந்தோம்.
நானும் என் தம்பியும் எங்கள் அளவிற்கு மொசைக் அது இது என்று எங்கள் ஆசைகளை சொல்லி செலவை இழுத்து விட்டும் இருந்தோம். வங்கி கடன், அம்மாவின் நகை, இன்னும் கைமாத்து, கால்மாத்து என்று வாங்கி அதிக பாரம் ஏற்றிய வண்டியை இழுக்கும் மாடு போல் அப்பா பெருமூச்சு விட்டு கொண்டு இருந்த நேரம்.
தீபாவளிக்கு நான் விடுமுறைக்கு வந்து இருந்தேன். எப்பொழுதும் போல் சினிமா, கூத்து என்று தீபாவளி கழிந்தாலும், வறுமையின் நிறத்தை காட்டி கொண்டு இருந்தது. அப்பொழுது ராஞ்சியில் இருந்து ஒரு சப்ளையர் வந்து இருந்தார். நடு வீட்டில் உட்கார்ந்து 20,000 ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்தார். அன்று எங்கள் வெளி கடனும் அவ்வளவே.
வந்தவருக்கு நல்ல விருந்து, உபசாரம் எல்லாம் முடிந்தது. எனக்கு மனதுக்குள் ஒரு சந்தோசம். பணம் வர போகிறது. அப்பா நிறைய துணி எல்லாம் எடுத்து தருவார். ஏதோ தீபாவளி முடிஞ்சாவது நமக்கு பம்பர்தான் என்று வந்தவர்க்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்தேன்.
எல்லாம் முடிந்து கிளம்பும் பொழுது அவரிடமே பணத்தை கொடுத்து "நீங்கள் வேலையை சரியாக முடியுங்கள் நான் கையெழுத்து போட்டு தாரேன் எனக்கு தேவையான வருமானம் எனக்கு வருது. அடிக்கடி நண்பராக எங்கள் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி அனுப்பி விட்டார்.
அவர் சென்ற பின் நான் என் அப்பாவுடன் சண்டை போட்டேன். கோன் ஐஸ்கிரீம் கிடைக்கும் என்று நினைத்த நேரத்தில் கையில் இருந்த குச்சி ஐசும் பறிக்கப்பட்ட குழந்தை போல் மனது துடித்து விட்டது. இன்றைக்கு போல் அன்று மனம் பக்குவப்படவில்லை. அனுபவங்கள்தானே வாழ்கையில் அமைதியை ஏற்படுத்துகிறது. ஆனால் அனுபவங்கள் கிடைத்து ஒரு மனிதனின் மனம் பக்குவபடும் போது வாழ்கையே முடிந்து விடுகிறது.
"லஞ்சமாக வரும் பணம் குடும்பத்தின் அமைதியை குலைத்து விடும். என் உழைப்பில் வராத பணத்தில் நான் குடும்பத்திற்கு எதுவும் செய்ய மாட்டேன்" என்று அப்பாவும், "அப்பாதான் அவ்வளவு சொல்றாரே, ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறே" என்று அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் ஏர் ஓடாத நிலம் போல் இருந்த மனதில் எதுவும் ஏறவில்லை.
இரண்டு நாட்கள் வீட்டில் யாருடனும் சரியாக பேசவில்லை. என்னுடைய செயலால் எல்லோரும் இறுக்கமாகவே இருந்தார்கள். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு கிளம்பி போகும் பொழுது, என்னை பேருந்தில் ஏற்றி விட அப்பாவும் பேருந்து நிலையம் வந்தார்கள்.
உள்ளே நுழைந்து பேருந்தில் ஏற போகும் நேரத்தில் என் செருப்பின் வார் அறுந்து விட்டது. பக்கத்தில் செருப்பு தைப்பவர் யாரும் இல்லை. மனது உள்ளே இருந்த இறுக்கம் மனதின் வழியே வழிந்து கண்ணின் ஓரத்தில் கரை கட்டி நிற்கிறது. அந்த பணம் இருந்தால் இப்போ BATA விலே போய் வாங்கி இருக்கலாமே என்று மனது புலம்புகிறது.
ஒரே பார்வை என் அப்பாவை பார்த்தேன். அவர் எதுவும் பேசாமல் அவர் செருப்பை கழட்டி என்னை போட்டு கொள்ள சொல்லி விட்டு கையில் வைத்து இருந்த மாலை முரசு செய்தி தாளில் நான் கழட்டி போட்ட செருப்பை கையில் எடுத்து கொண்டு வெறும் காலில் நின்றார்.
அந்த செருப்பு எதுக்குப்பா? என்று கேட்டேன்.
வெளியிலே செருப்பு தைக்கறவன் இருப்பான், நான் தைத்து போட்டு கொள்கிறேன் என்று சொன்னார்.
எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அவர் அந்த மாதிரி எல்லாம் போட கூடியவர் அல்ல. மிகவும் stylish ஆக இருக்க கூடியவர்.
பரவாயில்லை அப்பா நான் அப்படியே அட்ஜஸ்ட் செய்து போட்டுகிட்டு காலேஜிக்கு போறேன், அங்கே போய் தைத்து கொள்றேன் என்று சொன்னேன்.
இல்லப்பா, எனக்கு செருப்பை தைத்து போட்டுகிறது பெரிய பிரச்சனை இல்லப்பா, ஆனால் என் பிள்ளைக்கு என் கொள்கையை புரிய வைக்க முடியவில்லை என்பது தான் எனக்கு வருத்தம். நான் எடுத்த முடிவு சரி என்கிறதை நீ ஒரு நாள் புரிந்து கொள்வாய் என்று சொன்னார்.
பேருந்து கிளம்ப ஹாரன் ஒலித்தது, ஓடி சென்று ஏறி கொண்டு என் இருக்கையில் அமர்ந்து அப்பாவை பார்த்தேன், அதே சிரித்த, கவலையே தெரியாத முகம். எப்போதும் போல் பேருந்து வேகம் எடுக்கும் வரையில் கூட நடந்து வருகிறார். கக்கத்தில் மாலை முரசு பேப்பருக்கு உள்ளே என் செருப்பு.
மாலை நேர வெயில் அவர் முகத்தில் பட கண்ணை இடுக்கி கொண்டு பேருந்து திரும்புவதை பார்த்து கொண்டு இருக்கிறார். எனக்கு தான் அவரது உருவம் மங்கலாக தெரிந்தது. இப்பொழுதும் என் கண்ணின் ஓரத்தில் நீர் இருந்தது ஆனால் அது எனக்கு வேண்டியது கிடைக்காதால் அல்ல, என் அப்பாவின் பிரியத்தால்.
பூக்கடையை விட்டு வந்தபின்பும் அந்த வாசம் நம் கூட வருவது போல் அப்பாவின் வார்த்தைகளும், அவரது ஏக்கம் நிறைந்த பார்வையும் என் கூடவே வந்தது.
லஞ்சம் வாங்குவது பாவம் என்பதை நான் உணர்ந்து விட்டேன் என்பதை தான் நான் அவரிடம் கடைசி வரையில் சொல்லவில்லை. சொல்லித்தான் என்னை புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் என்றுமே இருந்தது இல்லை. எல்லாவற்றையும் சொல்லி விட்டால் அப்புறம் வாழ்கையில் ஏது சுவாரசியம்.