மொழி: மராத்தி
நடிகர்கள்: கிரிஷ் குல்கர்னி, சச்சின் கேத்கர், உஷா ஜாதவ்
இயக்கம் அருணா ராஜே
தயாரிப்பு: பிரியங்கா சோப்ரா (நடிகை)
கதை சுருக்கம்: நீதி மன்றத்தில் புலியாக இருக்கும் ஒரு பெண், தனது இளம் வயதில் ஏற்பட்ட பாலியல் பலாத்காரத்தினால் உருவாகும் மன உளைச்சலை வெல்ல போராடுவதே கதை.
மாதவ் மற்றும் சுனந்தா - இனிமையான இல்லறம் நடத்தும் தம்பதிகள். ஆனால் கணவருடன் இணையும் பொழுது சுனந்தாவிற்கு இளமையில் நடந்த பாலியல் வன்புணர்வு நினைவுக்கு வந்து இனிமை கலைகிறது. இந்த பக்கம் மிக சிக்கலானா வழக்குகளையும் மிக அனாசியகமாக வெல்லும் சுனந்தா தன் மனசிக்கலை வெல்ல முடியவில்லை. அவர் வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்கள் அனைவரும் மிக கெட்டவர்களாக இருப்பதே அதற்கு காரணம்.
இந்த சூழ்நிலையில் கணவருக்கு எந்த சந்தோஷமும் தர முடியவில்லை என்று சுனந்தா தன் கணவரிடன் தன்னை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழும் மாறு சொல்கின்றார். மாதவ் மறுத்து விட்டு நீ என்னை கூப்பிடும் பொழுது வருகிறேன் என்று கிராமத்திற்கு போய் விடுகிறார்.
இதற்கு இடையில் திவ்யா - ஆனந்த் விவாகரத்து வழக்கு வருகின்றது. இது வரை கொடுமை செய்யும் ஆண்களை பார்த்த சுனந்தா முதல் முறையாக ஒரு நல்ல ஆண்மகனை பார்க்கிறார். அதனால் அந்த வழக்கில் வெல்ல வாய்ப்பு இருந்தும் தோற்று போகின்றார். பின்பு நன்றி சொல்ல வரும் ஆனந்த் மூலமாக அடையும் தெளிவில் மீண்டும் கணவருடன் இணைகிறார்.
ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் அது குறித்த ஒரு செய்தியாக நாம் கடந்து போகும் பெண்களின் வாழ்க்கையில் அதன் பின்பு நடக்கும் மனச் சிக்கல்களை வைத்து ஒரு படத்தினை தயாரித்த பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துகள். அதிலும் அவர் இணைத்த TEAM தான் இதில் மிக முக்கியம்.
அருணா ராஜே - பல விருதுகள் வாங்கிய இயக்குனர். பெண்ணுரிமை சார்ந்த தளத்தில் மிக அதிகமாக இயங்கி வருபவரும் கூட. அதே போல் சிறந்த நடிகைகைக்கு விருது வாங்கிய உஷா ஜாதவ் மற்றும் மிக சிறந்த நடிகர்களான கிரிஷ் குல்கர்னி, சச்சின் கேத்கர் என்று மிக பெரிய தலைகள் இணைத்த படம். எந்த இடத்திலும் இந்த கூட்டணி நம்மை ஏமாற்றவில்லை.
மனநல மருத்துவர் ஒரு குரங்கு பொம்மையை தன்னை வன்புணர்வு செய்தவனாக நினைத்து கொண்டு தண்டனை தர சொல்லும் காட்சியில் உஷா ஜாதவின் நடிப்பு உச்சத்தில் இருக்கும். ஆக்ரோஷம், அழுகை, இயலாமை, கோபம், வெறுமை என்று அத்தனை உணர்வினையும் வெளிப்படுத்தி இருப்பார். படம் மொத்தத்தையும் தாங்கி நிற்பது உஷாதான்.
கிரிஷ் குல்கர்னி - சுனந்தாவின் கணவர் மாதவ் ஆக சிறப்பாக UNDER PLAY செய்து இருப்பார். தமிழில் நிறைய படங்களில் சிவகுமார் செய்து இருப்பது போல். மனைவி மேல் தீரா காதல், அவரது வெற்றிகள் குறித்த பெருமிதம் என்று எல்லா இடங்களிலும் நிறைவாக செய்து இருப்பார். நிறைவாக தன் மனைவி இன்னும் ஒரு ஆடவனுடன் உறவு கொண்டு இருந்தார் என்பதை அறியும் பொழுது ஏற்படும் தயக்கமும், மனக்குழம்பமும் அதனை தாண்டிய காதலும் என்பதை அந்த காட்சியில் சிறப்பாக செய்து இருப்பார். படம் முழுவதும்
UNDER PLAY செய்தவருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. வீண் அடிக்காமல் சிக்ஸர் அடித்து இருப்பார்
சச்சின் கேத்கர் - ஆனந்த் - மனைவியின் கொடுமைகளுக்கு எதுவும் செய்ய முடியாமல் மகளுக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து போகும் அப்பாவாக நிறைவு.
எல்லாமே சிறப்பாக அமைந்த படம். ஆனால் படத்தின் இறுதியில் வரும் ஆனந்த் மற்றும் சுனந்தா வின் உடல் உறவும் அதனை நியாயப்படுத்த சுனந்தா பேசுவதும் எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. ஆனந்த் சொல்லும் SO WHAT தத்துவத்துடன் சுனந்தாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக முடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து. அந்த உடல் உறவு வலிந்து திணிக்கப்பட்டது போல் உள்ளது. ஒரு வேலை NETFLIX படம் என்றாலே அப்படி இருக்க வேண்டும் என்று எதுவும் சட்டம் உள்ளதோ தெரியவில்லை.
யாரும் நன்னெறி வகுப்புகளுக்கு (MORAL SCIENCE CLASS ) இப்பொழுது போவது இல்லை என்பதால் நாம் அது குறித்து பேசுவதும் தவறோ என்று தோன்றுகிறது. கடைசி 20 நிமிடங்கள் மட்டும் படத்தில் சற்றே மாற்றி இருக்கலாம்
இந்த படத்தில் இன்னும் ஒரு நம்பிக்கையான தரும் ஒரு விஷயம். இரண்டு கணவர்களும் மிக நல்லவர்களா காட்டி இருப்பது தான். பொதுவாக இம்மாதிரி FEMINIST படங்களில் அனைத்து ஆண்களும் கெட்டவர்களே என்பது போல் வரும். இதில் அப்படி இல்லை.
மிக சிறந்த படம். நிறைய இடங்களில் சின்ன சின்ன வசனங்களில், காட்சிகளில் பெண்கள் இன்னும் தடுமாறி கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுக்கான உண்மையான விடியல் வரவில்லை என்பதை போகிற போக்கில் நமது முகத்தில் அறைந்தது போல் சொல்லிய விதத்தில் FIRE BRAND பார்க்க வேண்டிய படம்.
No comments:
Post a Comment