பார்த்தது : ரெய்டு (RAID )
மொழி: ஹிந்தி
நடிகர்கள்: அஜய் தேவ்கன் , இலியானா, சவுரப் சுக்லா
ஒளிப்பதிவு: அல்போன்ஸ் ராய்
கதை: ரிதேஷ் ஷா
இயக்கம்: ராஜ் குமார் குப்தா
NO ONE KILLED JESSICA வினை தொடர்ந்து இயக்குனர்
ராஜ் குமார் குப்தாவின் அடுத்த உண்மைக்கு நெருக்கமான படைப்பு.
அமே பட்நாயக் (
அஜய் தேவ்கன்) ஒரு வருமான துறை அதிகாரி. அவரது மனைவி மாலினி (
இலியானா).
அவருக்கு ஒரு நாள் ஒரு மர்ம அழைப்பு வருகின்றது. அதில் ராமேஸ்வர் சிங் (
சவுரப் சுக்லா) என்ற MP யின் வீட்டில் உள்ள கணக்கில் வராத பணத்தை குறித்த தகவல் கிடைக்கிறது.
அவரது வீட்டிற்கு ரெய்டுக்கு போகிறார்கள்.
போகும் அதிகாரிகளே அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள்.
அரை நாட்களுக்கு மேல் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. சோர்ந்து போய் இருக்கும்
அமே பட்நாயக்கிற்கு வீட்டில் இருக்கும் ஒருவரே ஒரு வரைபடத்தை தருகிறார்.
அதன் படி தேட ஆரம்பிக்கும் பொழுது தங்க கட்டிகள், கோடி கணக்கில் பணம் என்று தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது.
ராமேஸ்வர் சிங் தன்னுடைய எல்லா செல்வாக்கையும் பயன் படுத்தி ரெயிடை நிறுத்த பார்க்கின்றார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வரை செல்கின்றார். அவரிடம்
அமே பட்நாயக்
ரெயிடை நிறுத்த பிரதமர் கையெழுத்திட வேண்டும் என்று கேட்கிறார். அவரின் நேர்மையை உணர்ந்து பிரதமர் தொடர அனுமதிக்கிறார்.
இதற்கு இடையில்
ராமேஸ்வர் சிங் தன்னுடைய அடியாட்களை வைத்து மொத்த அதிகாரிகளையும் கொல்ல பார்க்கின்றார்.
மத்திய அரசு அனுப்பி வைக்கும் காவல் துறை அவர்களை காப்பாற்றுகிறது
பிரதமர் இம்மாதிரியான அதிகாரிகள் நாட்டுக்கு தேவை என்று சொல்கிறார்.
ராமேஸ்வர் சிங் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களில் யார் தகவல் கொடுத்தார்கள் என்று கேட்கும் பொழுது அதனை சொல்ல
அமே பட்நாயக் மறுத்து விடுகிறார். அவர் சிறைச்சாலையில் யாராக இருக்கும் என்று ஆராய்ந்து கொண்டு இருப்பதுடன் படம் முடிகின்றது
ராமேஸ்வர் சிங் ஆக நடித்து இருக்கும்
சவுரப் சுக்லாவின் நடிப்பு படத்தின் மிக பெரிய பலம். இவர் தமிழில் தில்லுக்கு துட்டு படத்தில் ஹீரோயின் அப்பாவாக வருவார் (அந்த படம் அவருக்கு ஒரு திருஷ்டி )
அதுவும் அவர் அம்மாவிடம் ராவணனை வீழ்த்தியது ராமன் இல்லை கூட இருந்த விபீஷ்ணன் தான். நம் வீட்டின்
விபீஷ்ணன் யார் என்று கேட்கும் போதும்,
அமே பட்நாயக்கை அசால்ட்டாக deal செய்யும் போதும் தெறிக்க விட்டு இருப்பார்.
அஜய் தேவ்கன் வழக்கம் போல் அமைதியான மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்
இதில் தேவை இல்லாத திணிப்பு இலியானவும் அவருக்காக வைக்க பட்ட பாட்டும் தான்.
ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட படம். அந்த சோர்வு தெரியாமல் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் சிறப்பாக அமைந்து இருக்கிறது.
1981ல் இந்திய வருமான துறை வரலாற்றில் நீண்ட நாட்கள் - 4 நாட்கள்
கான்பூர் சட்ட பேரவை உறுப்பினர் சர்தார் இந்தர் சிங் வீட்டில் நடந்த ரெய்டினை சார்ந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
Wow! But how come you do watch hindi movies too? Did you watch it in the internet or where else Ravi?
ReplyDeleteIn internet only
Delete