கத்தி படமும் அது சொல்லும் கருத்தும் (மெசேஜ்)
கத்தி படத்தில் நிறைய message இருக்கு நீங்க அவசியம் பார்க்கணும் என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார். ஏதோ மெசேஜ் உள்ள படங்கள் மட்டும்தான் நான் பார்ப்பேன் என்ற விரதத்தில் இருப்பது போல. வெளியாகும் அத்தனை படங்களையும் இன்னும் சொல்ல போனால் அதில் நடித்தவர்களே பார்க்க யோசிக்கும் படங்களையும் நான் பார்த்து விடுவேன் என்று நண்பருக்கு தெரியவில்லை.
எனக்கு படத்திலும் படம் சார்ந்து வெளியிலும் தெரிந்த மெசேஜ்கள்

முதலில் தமிழர் அமைப்புகள் கொடுத்த மெசேஜ்
மிகவும் உக்கிரமாக போராடிய அமைப்புகள் கடைசியில் LYCA என்ற பெயரை எடுத்து விட்டால் போதுமானது என்று சொல்லி விட்டார்கள்.அது எப்படி உடனே அது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாறி விடும் என்று தெரியவில்லை.
ஆனால் இன்று என்ன நடந்து உள்ளது ?
தணிக்கை துறை சான்றிதழில் (Censor Certificate ) மிக பெரிய எழுத்துகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ளது. ஞானம் புரொடக்சன்ஸ் என்று போடும் பொழுது திரை அரங்கில் பலர் லைகா பெயர் வராது என்று சொல்வதை கேட்க முடிந்தது. இது விஸ்வரூபம் படத்தின் போதும் நடந்தது. மௌனமாக்க பட்ட இடங்களில் என்ன வசனம் வந்து இருக்கும் என்பதை மக்கள் பத்திரிகை வாயிலாக படித்து கொண்டு வந்து மிக உரக்க சொல்லி கொண்டு இருந்தார்கள்.
அது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் என்ற இடத்தில் சுபாஷ்கரன் என்ற பெயரும் வருகின்றது. அவர் தானே லைகா நிறுவனத்தின் முதலாளி. அவர் பெயர் இருந்தால் பரவாயில்லை. ஆனால் லைகா பெயர் இருக்க கூடாது என்பது என்ன விதமான தமிழ் தேசியம் என்று எனக்கு புரியவில்லை.
இதை விட இதில் உள்ள மிக முக்கியமான அம்சம் கத்தி படம் இது வரையிலுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக தகவல். இந்த பணத்தில் பாதி சுபாஷ்கரனுக்கு தானே போகும். அது பரவாயில்லையா ?. இதனை யார் தெளிவு படுத்துவார்கள் என்று தெரியவில்லை.
கத்தி படம் முன் வைக்கும் கருத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட கூடாது. விவசாய வாழ்வாதாரங்கள் அழிக்க பட கூடாது. மிகவும் சரியான கருத்து. இன்று நமது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே தேவைப்படும் கருத்து.
இது எத்தனை பேருக்கு போய் சேர்ந்து இருக்கும் என்பது தான் மிக பெரிய கேள்வி.
முதலில் பலர் விஜய் இதனை சொல்ல தகுதி கிடையாது. அவரே கோலா விளம்பரத்தில் நடித்தவர் என்ற விமர்சனத்தை முன் வைத்தார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அவர் இப்பொழுது உண்மை நிலைமை தெரிந்து மாறி இருக்கலாம். அல்லது அவருடைய அரசியல் ஆசைகளுக்கு அடித்தளமாக இந்த மாதிரி எழுச்சி படங்கள் உதவலாம் என்று நினைத்து இருக்கலாம்.
ஒரு பழைய படத்தில் திரு M .R . ராதா அவர்கள் சொல்வார் " சொல்றவன் யார்னு பாக்காதே சொன்ன விஷயம் சரியானு பார்" என்று.
அதன்படி பார்த்தால் இது ஒரு முக்கியமாக பேச வேண்டிய விசயம்தான். மற்ற விஷயங்கள் எப்படியோ மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றி ஒரு நாலு பேர் பேச வைத்துள்ளது. அந்த வகையில் நல்லது தான். கத்தி பட பாணியில் சூரியூரில் விவசாயிகள் போராட்டம் என்று தினத்தந்தி செய்தி போட உதவி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயம் சூரியூர் விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அது இப்பொழுதான் பேச படுகின்றது. இரண்டாவது அவர்கள் எதிர்த்து போராடும் நிறுவனத்தின் சார்ந்த திரை அரங்கில் தான் கத்தி படம் ஓடுகிறது.
சரி மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள் இனி என்ன நடக்கும்?
எதுவும் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. .நாலு நாளைக்கு மக்கள் பேசுவார்கள் அவ்வளவுதான்.
குடிப்பது தவறு என்று தன்னுடைய அனைத்து படங்களிலும் MGR வலியுறுத்தி வந்தார். ( அவரே பின்பு மதுக்கடைகளை மூடவில்லை என்பது வேறு விஷயம் ) அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் குடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். MGR ரை விட விஜய் பெரிய ஆளுமை கிடையாது. அதனால் இந்த படத்தின் கருத்தினை உள்வாங்கி மாபெரும் புரட்சி வர போவது கிடையாது.
கேரளத்தில் ஒரு டவுன் பஞ்சாயத்து தீர்மானம் போட்டு கோலா நிறுவனம் ஒன்றினை நிறுத்தியதாக செய்தி தாளில் முன்பு படித்தாக நினைவு.
ஆனால் இங்கு தமிழகத்தை பாலைவனமாக்க போகும் மீத்தேன் திட்டம் பற்றி திருச்சியில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. தமிழக பொதுப்பணி துறையில் பணி ஆற்றிய மிக மூத்த பொறியாளர்கள் ஒன்று கூடி நடத்தினார்கள். அதிக பட்சமாக 800 பேர் வந்து இருப்பார்கள். இது தான் நமது தேசம்.
எனக்கு படத்தில் இட்லி வசனம் வந்த பொழுது ஒரு சந்தேகம் வந்தது. காங்கிரஸ், பிஜேபி என்று பலரை சந்தித்த விஜய் எப்பொழுது கம்யூனிஸ்ட் தோழர்களை போய் பார்த்தார் என்று. தா. பா அவர்கள் EVKS போல் ஏமாறாமல் முழுமையான உண்மை அறிந்த பின் விஜய் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாரா என்று சொல்வது நல்லது. விஜயும் ஒரு ஜூனியர் கார்த்திக் தான்.
சுறா, குருவி, போல நம்மை சோதிக்கவில்லை என்று சொல்கிறது. எனக்கு கிடைத்த மெசேஜ் இது தான்.

பேசும் பிரச்சனை:

சரி கத்தி படம் வேற என்ன சொல்லுது ?
சுறா, குருவி, போல நம்மை சோதிக்கவில்லை என்று சொல்கிறது. எனக்கு கிடைத்த மெசேஜ் இது தான்.
No comments:
Post a Comment