அக்கரை சிவப்பு - ராஜேஷ் குமார்
அக்கரை சிவப்பு, பூமாலை நீயே, வாய்மையே வெல்லும் என்ற மூன்று குறு நாவல்கள் அடங்
கிய ஒரு புத்தகம் படித்தேன். இதனை நாவல்கள் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் சுமார் 70 பக்கங்களில் எழுதப்படுவது நாவலா என்று எனக்கு தெரியவில்லை.
5 பாகங்களில் படித்த பொன்னியின் செல்வன், 2 பாகங்களில் படித்த கடல் புறாவை எல்லாம் கணக்கில் எடுத்தால் இந்த வகையான நாவல்களை எதில் வகை படுத்துவது என்று தெரியவில்லை.
ஆனால் இதுபோல் சுமார் 1500 நாவல்களை திரு. ராஜேஷ்குமார் எழுதி உள்ளார் என்பது தான் இதில் உள்ள சிறப்பு.
மூன்று குறு நாவல்களும் எப்பொழுதும் போல மிகவும் விறு விறுப்பாக இருந்தது. முதல் நாவலான அக்கரை சிவப்பில் - நித்யா என்ற பெண் துபாயில் வேலை பார்க்கும் அவளது கணவனை சந்திக்க போகும் போது, அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் ஒரு பார்செலினால் வரும் பிரச்சினைகளை பற்றிய கதை.
பூமாலை நீயே - மனித ரத்தத்தினை செயற்கையாக உருவாக்கும் ஒரு விஞ்ஞானி பற்றிய ஒரு கதை. ஏகப்பட்ட கொலைகள் செய்தும் அவரால் கடைசி வரைக்கும் செயற்கை ரத்தம் கண்டு பிடிக்க முடியாமல் போலீசில் மாட்டி கொள்ளுகிறார்.
வாய்மையே வெல்லும் - காதலனனின் மரணத்திற்காக பழி வாங்கும் காதலி பற்றிய ஒரு கதை.
திரு. ராஜேஷ்குமாரின் கதைகளில் எப்போதும் உள்ள விறுவிறுப்பு, அதிகப்படியான ஆங்கில கலப்பு வார்த்தைகள், தெளிவான எழுத்தோட்டம் அமைந்த ஒரு புத்தகம்.
ராஜேஷ்குமார் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பு எப்பொழுதும் அதனை நாம் கவலை படாமல் சிறுவர்களுக்கும் படிக்கக் கொடுக்கலாம். காரணம் அவரது எந்த நாவலும் ஆபாச கருத்துகளோ அல்லது தவறான வழிகாட்டுதலோ காட்டாது.

No comments:
Post a Comment