ஒரு நாள் இரவில்
படத் தொகுப்பு , திரைக்கதை இயக்கம் : ஆண்டனி
கதை : ஜாய் மேத்யு
வசனம்: யூகி சேது
இசை: நவீன்
நடிகர்கள்: சத்யராஜ், அனுமோல், வருண்
சத்யராஜ் ஒரு சராசரி தகப்பன். சக கல்லூரி மாணவனுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். திருமணம் தேவை இல்லை என்று சொல்லும் மனைவியின் மீதிருக்கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது. தெரு தெருவாக தங்கும் விடுதிகளில் அறை தேடி அலைந்து கடைசி ஆக காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம்பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று.
அதில் சத்யராஜையும் அனு மோளையும் வைத்துப் பூட்டி விட்டு சாப்பாடு வாங்கிவர வெளியே செல்லும் ஆட்டோ டிரை வர், போலீஸில் மாட்டிக்கொள்ள நிலைமை விபரீதமாகிறது.
கோபத்துடன் வெளியே சென்றவர் திரும்பி வரவில்லையே என்று சத்யராஜின் குடும்பம் பதற, பூட்டிய கடைக்குள் சத்யராஜும் அனுமோளும் ஆட்டோ டிரைவருக்காகக் காத்திருக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.
ஜாய் மேத்யூ எழுதி இயக் கிய ‘ஷட்டர்’ என்ற மலை யாளப் படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கிறது இப்படம். விறுவிறுப்பாகப் படத் தொகுப்புகளுக்கு பேர் போன படத் தொகுப்பாளர் ஆன்டனி இயக்குநராக அறிமுகமாகி யிருக்கும் படம். படத் தொகுப்பும் அவரே. மற்றவர்கள் படத்தையே விறுவிறுப்பாக மாற்ற கூடியவர் அவரது படத்தை எவ்வளவு அருமையா செய்து இருப்பார் என்று நம்பி போனால் !!!!!!!!!!
பாலியல் தொழிலாளியுடன் கடைக்குள் மாட்டிக்கொண்ட சத்யராஜ், இது வெளியே தெரிந்தால் தன் குடும்ப கவுரவம் என்னாவது என்று பதறுகிறார். அந்த பெண்ணுக்கும் பெருத்த சங்கடம். இதனால் சத்ய ராஜை கண்டபடி திட்ட ஆரம்பிக்கிறார். அவரை சமாளிக்க வழி தெரியாமல் சத்யராஜ் விழி பிதுங்குகிறது. மேலும் மாட்டிக் கொள்ளாமல் எப்படி வெளியில் வர போகிறார்கள் என்ற பதற்றமும் தவிப்பும் தான் திரைக்கதையின் அழுத்தத்தை தீர்மானித்திருக்க வேண்டும்.
ஆனால் கதை எங்கோ பயணிப்பது கதையின் அழுத்தத்தை குறைத்து,திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. மேலும் வருண் செய்யும் போன் காலை யார் எடுத்தது என்பது ஒரு அழுத்தமாக காட்டப்பட்டு இருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்கும். இன்னும் சொல்ல போனால் இடை வேளை block க்கு பக்கத்தில் உள்ள மெகானிக்கை பயன் படுத்தாமல் இந்த தொலைபேசி அழைப்பை பயன் படுத்தி இருக்கலாம்.
பாலியல் தொழிலாளியாக வரும் அனுமோல் சிறப்பாக நடித்து இருக்கிறார். அதுவும் யூகி சேது ஆரஞ்சி சட்டை பூ பூவாக இருக்குமே என்னும் பொழுது பார்க்கும் ஒரு வெறுமையான பார்வையில் மிக சிறப்பு. துளியும் ஆபாசம் வெளிப்படாமல் பாலியல் தொழி லாளியின் நிலையை சித்தரிக் கும் அனுமோள் வசீகரிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நண்பர் யூகி சேதுவாக இருக்கலாம் என்று தோன்றும் அளவுக்கே திரைக்கதை இருக்கிறது. அதே போல் வருண் கண்டிப்பாக குடி போதையில் வாகனம் ஒட்டி செல்வதற்கு மாட்டுவார் என்பதும் நன்றாக தெரிவது போல் திரைக்கதை மிக பலவினமாக உள்ளது.
மிகவும் போற்ற தக்க ஒரு விஷயம் எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, மொத்த கதையும் ஒரு சின்ன கடைக்குள் நடப்பது போல் இருந்தாலும் ஒளிப்பதிவின் ஆளுமை வெளிப்படுகிறது.
தேவைக்கு அதிக மாக ஒரு வார்த்தைகூட எழுதப் படாத அவரது வசனம் மொத்த படத்துக்கும் பெரிய பலம். யூகி சேது மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் போலும். தூங்காவனம் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் மிக சிறப்பாக செய்து இருக்கிறார்.
படத்தில் எல்லாம் இருந்தாலும் திரைக்கதை ஏற்படுத்தும் அயர்ச்சி படம் ஒரு அனுபவமாக மாறுவதைத் தடுத்துவிடுகிறது. சிறிய படமாக இருந்தாலும் படம் முடியும் பொழுது ஏதோ ரெண்டு நாள் ஆனது போல் ஒரு அலுப்பு.
மலையாள மூல படத்தை பார்க்க வேண்டும் அங்கு SUPER HIT ஆக என்ன இருந்தது அது இங்கு குறைந்து விட்டது என்று.
உபரி தகவல்: அனேகமாக சம்மந்திகள் சேர்ந்து தயாரித்த படம் உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும். இயக்குனர் விஜய் அப்பா அழகப்பனும் அமலபால் அப்பாவும் சேர்ந்து தயாரித்து உள்ளார்கள்
No comments:
Post a Comment