
ஈசன்
சுப்ரமணியபுரம், நாடோடிகள் என இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு M. சசிகுமாரின் படம். மீண்டும் சமுத்ரகனி உடன் கூட்டணி அமைத்து உள்ளார்.
கதை : சென்னை மாநகரத்தின் மறுபக்கம். பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் தொடங்கி எத்தனையோ படங்களில் பார்த்த விஷயங்கள் சசிகுமாரின் பார்வையில் மீண்டும்.
படம் ஆரம்பத்தில் ஒரு விபத்து. விபத்து நடக்கும்பொழுது எதிர் திசையில் ஒரு பைக் கொஞ்சம் வேகம் குறைத்து மெதுவாகி பிறகு அப்படியே கண்டு கொள்ளாமல் போவதில் தொடங்கி படம் முழுவதும் சென்னை அல்லது ஏதோ ஒரு பெருநகரம் கண்ணில் தெரிகின்றது . ஒரு புறம் சென்னையின் இருண்ட பக்கங்கள் விரியும் பொழுது இன்னும் ஒரு track ல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உடனான இருண்ட பக்கங்கள் விரிகிறது.
இடைவேளைக்கு பிறகு விரியும் flash back ல் ஒரு கிராமத்து பெண் சென்னையின் மாயவலையில் சிக்குவதை மிகவும் அருமையாக காட்டி உள்ளார். சிறு நகரங்களில் வசிப்போர் அனைவரும் தங்கள் வீடுகளிலோ அல்லது அக்கம் பக்கத்துக்கு வீடுகளிலோ அமைதியாக இருந்த பெண், சென்னைக்கு படிக்கவோ அல்லது வேலைக்கோ சென்றுவிட்டு ஊருக்கு வரும்பொழு

+1 படிக்கும் பையன் என்னதான் SUPER INTELLIGENT ஆக இருந்தாலும் அவன் செய்யும் சில விஷயங்கள் நெருடத்தான் செய்கிறது. ஆனால் எல்லாவற்றையம் தாண்டி படம் நம்மை ஈர்க்கிறது என்பதுதான் உண்மை.
படத்தில் ஒரு சிறந்த விஷயம் பல விசயங்களை suggestive ஆக சொல்லி இருப்பதுதான். பூரணியின் கற்பழிப்பு காட்சியில் வெளியில் துடிக்கும் பெண்ணின் முகபாவனைகளில் உள்ளே நடக்கும் வன்முறை காட்டுவதில் ஆகட்டும், காவல் நிலையத்தில் வாந்தி வராது என்று உதார் விடும் கோபாலை வாந்தி எடுக்க வைப்பதில் ஆகட்டும் இந்த உத்தி மிகவும் அழகாக கையாலப்பட்டு இருக்கிறது.
விஷம் என்பது தெரிந்து பூரணி பார்க்கும் பார்வையும் அதற்கு அப்பா தலை குனிந்தவுடன் புரிந்து மிக வேகமாக எடுத்து குடிப்பது மனதை உருக்கும் ஒரு காட்சி. அதில் அபிநயாவின் முக பாவனைகள் மிகவும் அருமையாக உள்ளது.
தெய்வநாயகம் மகனை பெரிய ஆளாக ஆக்க போகிறேன் என்று சொன்னவுடன் கோபால் " தெய்வம் பெத்த தெய்வ மகனே " என்று போஸ்டர் அடித்துவிடுகிறேன் என்று சொன்னதும் மந்திரியின் மனைவி முகத்தில் ஒரு குறுநகை காட்டி ஒரு சிரிப்பு வருமே மிக அழகான ஒரு expression. இப்படி படம் முழுவதும் ஆங்கு ஆங்கு ரசிக்ககூடிய பல காட்சிகள்.
சமுத்திர கனி ஆகட்டும், தெய்வநாயகமாக வரும் தயாரிப்பாளர் அழகப்பன் ஆகட்டும் இருவருமே மிக அருமையாக performance செய்து இருக்கிறார்கள். ஒரு யதார்தமான போலீஸ் அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இசை பெரிதாக சொல்ல எதுவும் இல்லை. கடற்கரை ஓரமாக ஒரு குண்டு பெண்மணி பாடும் பாடலில்தான் ஓரளவுக்காவாது ஜேம்ஸ் தெரிகின்றார்.
கதிரின் ஒளிப்பதிவு கதையோடு இணைந்து செல்கிறது
எல்லாம் இருக்கிறது ஆனால் சசிகுமாரிடம் நாம் நிறைய எதிர் பார்போம் என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். கொஞ்சம் நீளம் அதிகமோ என்று யோசிக்க வைக்கிறது. படம் முடிந்து வரும்பொழுது " சென்னையின் இரவு வாழ்க்கையை அதிகமா காட்டி இருக்க வேண்டாமோ என்று எனக்கு தோணுகிறது" என்று சொன்னதற்கு, "அப்பா அது தெரியாத எவ்வளோவோ பேர் படம் பார்ப்பார்கள் அது தெரிந்தால்தான் அவர்களால் கதையோட ஒன்றி போக முடியும் அந்த வகையில் சரிதான் " என்று சொன்னான்.
படத்தின் விமர்சனம் என்பது போக எனக்குள் ஒரு கேள்வி " சென்னையில் உள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு ஊரில் இருந்துதான் வந்து இருப்பார்கள். அப்போ அந்த ஊரின் பண்பு எங்கே போனது? "