என்னுடைய கன்னி முயற்சி
வலைபூக்கள் எழுதுவது தமிழிலேயே எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை.தமிழில் தட்டச்சு தெரியாத காரணத்தினால் இன்று வரை சாத்தியப்படவில்லை.
எனது நண்பர் ஒருவர்தான் கூகுள் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியினை தருகின்றது என்று சொன்னார்.
அதன் விளைவே இந்த வலைப்பூ.
சிறு குழந்தை ஒன்று எழுத தொடங்கும்போது என்ன பதட்டம் இருக்குமோ அந்த அளவு பதட்டம் என்னுள்ளும் இருக்கின்றது.
எனது எழுத்துகள் இதற்கு முன்பாக எனது துறை (கட்டுமானம் ) சார்ந்த இதழ்களில் வந்தது உண்டு.
மிக நன்றாக எழுத எனது தகுதியினை நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை என்னுள் இருகின்றது.
No comments:
Post a Comment