19 May 2012

சிந்தனை அரங்கம் - 1

சிந்தனை அரங்கம் - 1

"மின் பற்றாக்  குறை - பிரச்சினைகளும்  தீர்வுகளும் "


நவீன பொருளியல் வாழ்வில் மனிதர்கள் அனைவரும் நுகர்வோர்களாக மாற்றப்பட்டுசமூகஇயக்கம் என்பது தனி மனித வாழ்க்கையின் நிறைவுகளே என்பதாக  மாறி போய்விட்டது.



முன் எப்பொழுதையும் விட தற்கால வாழ்க்கையானது  முழுவதும்  சுயநலம்  சார்ந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அதிலும்  குறிப்பாக  குடும்ப  அலகுகளும்  சிதைக்க பட்டு நான், எனது  என்கின்ற  சொல்லாடல்களும்  நிரம்பி வழிவதாக உலகம் மாறி விட்டது.

இத்தகைய சூழலில் தான் கடந்த 23. 04. 2012 ஞாயிற்று கிழமை காலை 10.30  மணி  அளவில் இந்த கூடல் நிகழ்ந்தது. சமூகம் மீதான தொடர்  விமர்சனங்களையும், சொல்லேரிதல்களையும் தவிர்த்து ஆக்க பூர்வமான கூடல் தான் "சிந்தனை அரங்கம் " எனும் பெயரிலான மேற்சொன்ன நிகழ்வு.

நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் நிகழ்ந்த அவ்வரங்கில் பொறி. இரவி , திருவாளர்கள்  அருள், முகமது இப்ராகிம், ஆத்மனாதன், சரவணன், கவித்துவன், ராஜா ரகுநாதன், இனியன்  ஆகியோர்  கலந்து  கொண்டு  தம்  கருத்தையும்  தீர்வுகளையும்  முன் மொழிந்தனர்.

மின் வெட்டினால் ஏறக்குறைய 60 % சிறு தொழில்கள்  மிகுந்த  பாதிப்பு  அடைந்து  உள்ளன. சென்ற  வாரம்  ஒரு  அச்சக  வாசலில்  பார்த்த  ஒரு  அறிவிப்பு இந்த அவலத்தின் உச்சம் என சொல்லலாம் -

 "எனக்கு  பிரிண்டிங்  வேலை  கொடுக்க வரும்  நீங்கள் எக்காரணம்  கொண்டும்  வேலை தாமதமாக  நடக்கிறது  என்று  சண்டை  போடாமல்  இருப்பிர்கள் என்றால் வேலை  கொடுக்கவும்  இல்லை  என்றால்  உங்கள்  வேலை தேவை இல்லை."

எந்தவொரு  நிறுவனமும் வேலை வேண்டும் என்று தான் சொல்வார்கள் இவர் 
ஏன் இப்படி சொல்கிறார் என்று விசாரித்தபொழுது மின் வெட்டின் கோர முகம் தெரிந்தது. இதனை  அடிப்படையாக  கொண்டு மின்சாரம்  இருக்கும் நேரத்தில்  தொழில்  செய்வதின் சிக்கல்கள் விவாதிக்கப் பட்டன. 

மின் பற்றாக்  குறை - ஏன் ?

01. பன்னாட்டு  நிறுவன  பெருக்கத்தினால்  அவைகளுக்கு  வழங்கப்படும் மின்சாரத்தினால் நமது பயன்பாற்றிக்கான மின் தேவையில் பெரும் அளவு குறைகிறது.

02. மின்சார கடத்தியாக உபயோகப் படுத்தும் உலோக  கம்பிகளின்  தரக்   குறைவினால் சுமார் 22 % அளவிற்கு மின் இழப்பு ( Transmission Loss) ஏற்படுகிறது. குறிப்பாக தர குறைவான கம்பிகள் வாங்குவதின் பின்னணியில் பெரும்  ஊழலும் ஒளிந்து உள்ளது.

03. 2005 க்கு பிறகுதான் மின்வெட்டு தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக
உருவெடுத்தது . பன்னாட்டு   நிறுவனங்களுடன் ஒப்பந்தம்  போடுவதில்  ஆர்வம் காட்டும் அரசுகள் தொலை நோக்கு பார்வையுடன்  உரிய  மின்  திட்டங்களை தமிழகத்தில் செயல் படுத்தவில்லை.

04. தமிழக எல்லைக்குள் ஏற்கனவே இருக்கும் மின் திட்டங்களில்  மத்திய  அரசின்  நெருக்குதல் காரணமாக உரிய மின்சார அலகினை  தமிழகம் பெற  முடியாமல் போகின்றது.


மின் பற்றாக்  குறை - பாதிப்புகள் 


ஏறக்குறைய  60 % சதவிகித சிறு தொழில்கள் பாதிக்க பட்டு உள்ளன. உற்பத்தி சாரத தொழில்கலான மருத்துவமனைகள், Scan, X Ray போன்ற தொழில்கள் பெரும் சிக்கலில் உள்ளன. தற்காலிக ஏற்பாடாக Genset பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் சுற்று சுழல் மாசு கேடு, எரி பொருள் இழப்பு, அதிகரிக்கும் உற்பத்தி செலவுகள்  போன்றவை  பிரச்சனைக்குரிய  காரணிகள் ஆகின்றன.

திருச்சியில் உள்ள BHEL லின் துணை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் 16000 பேர் வேலை இழக்க மின்வெட்டே முதன்மை காரணியாகும். ஒரு 
மாவட்டத்திலேயே இந்த நிலைமை என்றால் மொத்த தமிழகத்திற்கும்  நிலைமை எப்படி இருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது.

 தொடர் மின்வெட்டினால் கைவிளக்கேந்திய கற்கால வாழ்க்கைக்கு  தமிழர்கள்  தள்ளப்படுகின்றனர்.சுய நல பிழைப்பு அரசியலினால் தமிழர்களின்  மின்சார உரிமை பலி இடப்படுகிறது.

மேற்குறிய கருத்துகள் மின்வெட்டிற்கு காரணங்களகவும், அதனால் ஏற்படும்  பிரச்சனைளகாவும்   விவாதிக்கபட்டன.

மின் பற்றாக்  குறை - தீர்வுகள் 


01. மாற்று மின் திட்டங்களை செயல் படுத்துதல்: சூரிய மின்சாரம் , காற்று ஆலை மின்சாரம், குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், அலை மின்சாரம் - இன்னும் இந்தியாவில் பிரபலம் ஆகாத ஒரு திட்டம். போன்றவற்றை அதிகரிக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

02. மேலும் மின் உற்பத்தி துறையில் ஆராய்ச்சி  மற்றும் விரிவாக்கம்  செய்ய அரசு ஊக்க படுத்த வேண்டும்.

03. நெய்வேலி மின்சாரத்தை முழுமையாக தமிழகத்திற்கு கிடைக்க வழிவகை 
செய்ய வேண்டும் .

04. கல்பாக்கம், கூடம்குளம் போன்ற அணு மின்நிலையங்களில் உற்பத்தி  ஆகும்  மின்சாரத்தை முழுமையாக தமிழகத்திற்கு தரவேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழகம் முழுமைக்கும் ஒரு போராட்டத்தினை  தமிழக அரசே முன்னிறுத்தி நடத்த வேண்டும்.

மின் பற்றாக்  குறை - தனிமனித கடமைகள் 

அரசாங்கத்தை  குறை சொல்வது மட்டும் அல்லாமல் தனி மனித வாழ்விலும் 
மின் பயன்பாட்டினை அவசியத்திற்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும். 

வீட்டில் அனைவரும் ஒரே அறையில் பல்வேறு வேலைகளை பார்த்து கொள்வது போன்ற விஷயங்கள் அனாவசியமாக மின் பயன்பாட்டை குறைக்கும்.


ஆடம்பர  மின் விளக்குகள், பிரமாண்டமான ஒளி பலகைகள்  போன்றவற்றை  தவிர்க்க வேண்டும். 

இவ்வாறாக சிந்தனை அரங்கம் " மின்சாரம் பற்றாக்  குறை - பிரச்சனைகளும்  தீர்வுகளும்" எனும் தலைப்பில் விவாதித்து உறுதி ஏற்றது. எதிர் வரும்  மாதத்தில்  மற்றொரு சமூகம் சார் பிரச்னை பற்றி விவாதிக்கவும் 
முடிவு செய்யப்பட்டது.


 


Followers